Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாமாங்கேஸ்வரர் ஆலய ஆறாம் நாள் முத்துச்சப்புர திருவிழா

வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஆறாம் நாள் திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
நேற்று இரவு மோசாப்பிட்டி மக்களின் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

நேற்று மாலை விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து தம்ப பூஜை நடைபெற்று வசந்த மண்டப பூஜை நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.

சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதியுலா முத்துச்சப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வருடாந்த உற்சவத்தில் தேர் உற்சவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 7.00மணிக்கு நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.




















Post a Comment

0 Comments