Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஞானசாரவுக்கு 6 வருட கடுழிய சிறைத் தண்டனை!


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மற்றுமொரு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக 2016ஆம் ஆண்டில் ஹோமாகம நீதிமன்ற வாளத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்போது 4 குற்றச்சாட்டுகளுக்கு 19 வருட கடுழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அதனை 6 வருடங்களில் நிறைவேற்றும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்ப்பு நிறைவேற்றப்படவுள்ளது.

ஏற்கனவே பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடுழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-(3)

Post a Comment

0 Comments