Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காரைதீவில் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

( காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு பிரதேசசபை விசேட அமர்வின் தீர்மானத்தையடுத்து அமைய ஊழியர்களின் இரண்டுநாள் ஆர்ப்பாட்டம் நிறைவு!
காரைதீவு பிரதேச சபையின் அவசர விசேட அமர்வின் தீர்மானத்தையடுத்து கடந்த இருதினங்களாக சபைமுன் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுவந்த அமையஊழியர்களின் போராட்டம் நிறைவுக்குவந்தது.
சபையின் அவசர விசேட அமர்வு நேற்று(7)செவ்வாய்க்கிழமை நண்பகல் 1மணியளவில் சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
அமர்வில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எம்.பஸ்மீர் த.மோகதாஸ் சி.ஜெயராணி ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் மு.காண்டீபன் ஆகியோர் சமுகமளித்து அனைவரும் சாதகமாக கருத்துரைத்தனர்.
அமர்வில் ஏகமனதாக எடுத்த தீர்மானம் வருமாறு:
சபையில் கடந்த பல்லாண்டு காலமாக அமையஅடிப்படையில் பணியாற்றிவரும் 12 ஊழியர்களுக்கும் முதலில் அவர்களது சேவைக்காலத்தை அடிப்படையாகக்கொண்டு நிரந்தரநியமனம் வழங்கப்படவேண்டும். ஆளுநரின் நியமனத்தில்வந்தவரை அதன்பின்னரே பதவியேற்கவிடுவது. அதற்காக ஒருகுழுவினர் நாளை கிழக்குமாகாண ஆளுநரையும் இன்னொருகுழுவினர் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளன. எமதுசபையின் தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும்.
ஊழியர்களுடன் சந்திப்பு! போராட்டம் நிறைவு!
அவசரவிசேட சபை அமர்வின்பின்னர் தவிசாளர் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் சென்று ஆர்ப்பாட்டத்திலீடுபடும் ஊழியர்களைச் சந்தித்து தமது தீர்மானத்தைத் தெரிவித்தனர். தவிசாளர் கே.ஜெயசிறில் தீர்மானத்தை ஊழியர்களிடம் கையளித்தார்.
தவிசாளர் ஜெயசிறில் அங்கு கூறுகையில் ‘எமது தீர்மானம் உங்களுக்கு நிரந்தரநியமனத்தைப்பெற்றுத்தருவதற்கு சாதகமாக வுள்ளது. அதுவரை யாரையும் கடமையேற்க நாம் அனுமதிக்கமாட்டோம். நாம் ஆளுநரையும் ஜனாதிபதியையும் சந்திக்கவிருக்கின்றோம். நீங்கள்விரும்பினால் இப்போராட்டத்தைக்கைவிடலாம். ஊர் மக்கள் நலன்கருதி நீங்கள் பணிக்குத்திரும்பலாம் ‘என்றார்.
முன்னாள் உபதவிசாளரும் சு.கட்சி அமைப்பாளருமான வீ.கிருஸ்ணமூர்த்தியும் கலந்துகொண்டு முன்னரிருந்த அமையஊழியர்களுக்கு எவ்வாறு நிந்தரநியமனம்பெற்றுக்கொடுத்தது என்பது தொடர்பில் விளக்கமளித்தார்.
ஊழியர்கள் சார்பில் சின்னராசா சிறிகரன் ‘தவிசாளரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தாம் தற்காலிகமாக இப்போராட்டத்தைக் கைவிடுவதாகவும் தக்கதீர்வை பெற்றுத்தருமாறும் ‘வேண்டிக்கொண்டார்.


அதனையடுத்து இருநாள் ஆர்ப்பாட்ட போராட்டம் முடிவுக்குவந்தது. தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஊழியர்களுக்கு பழரசம்கொடுத்து ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்தார்கள்.

Post a Comment

0 Comments