செ.துஜியந்தன்
பாண்டிருப்பில் வடிகான்களுக்கு மூடி இன்மைiயால் மக்கள் அவதி
பாண்டிருப்பிலுள்ள உள் வீதிகள் சிலவற்றில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு மேல் கொங்கிறீட் மூடிகள் போடப்படாமையினால் அவ் வீதிகளில் பயணிப்போர் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதுடன் விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர்.
இங்குள்ள உள் வீதிகள் மிகக்குறிகியதாகவுள்ள நிலையில் வடிகான்களுக்கும் மூடிகள் இன்மையால் வாகனங்களில் வருவோர் அதனை திருப்பமுடியாதுள்ளனர். இரவுவேளையில் பயணிப்போர் தெரு மின்விளக்குகள் இல்லாததினால் வடிகான்களுக்குள் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர்.
அத்துடன் வடிகான்களுக்குள் குப்பைகள், மண் அடைத்தும் கிடப்பதினால் மழைகாலங்களில் நீர்வடிந்தோட முடியாதுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய்க்கும் மக்கள் முகம்கொடுக்கவேண்டியுள்ளது.
பாண்டிருப்பு உள் வீதிகளில் மிக நீண்டகாலமாக கொங்கிறீட் மூடிகள் இன்றியுள்ள வடிகான்களுக்கு மேல் கொங்கிறீட் மூடிகளை அமைக்குமாறு கிராமமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
0 Comments