Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற 2001 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களை பிரதானமாககொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பு ( ZOPA )ஒழுங்கு செய்திருந்த ஸஹிரியன் பிரிமியர் லீக் கிறிக்கட் சுற்றுப் போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட 2006 – 2009 காலப்பகுதியில் கல்லூரியில் உயர்தரம் கற்ற கிறிக் 90 அணியினரையும் , ஸோபா ஏற்பாட்டுக்குழுவினரையும் , ஊடகத்துறைக்கு பங்களிப்பு செய்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை ( 30 ) சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் கிறிக் 90 அணித்தலைவர் எம்.கே.எம்.வாசித் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் பிரதம அதிதியாகவும் ஸோபா மாணவர் அமைப்பின் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.பிரிம்ஸாத் , ஏ.ஆர்.ஏ.ஸிஹான் , ஏ.எச்.இஸட்.இம்தியாஸ் , எஸ்.எம்.றமீஸ் மௌலானா , எம்.எம்.மௌசூன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாராட்டு விழா நிகழ்வில் பட்டயக் கணக்காளர் ஏ.எச்.எம்.சினாஸ் சக்கி ,பொறியியலாளர் ஏ.எல்.நப்ரிஸ் அஹமட் , சியபத பினான்ஸ் முகாமையாளரும் ஸோபா அமைப்பின் பணிப்பாளர்களுள் ஒருவருமான எம்.எச்.எம்.பிரிம்ஸாத் , கிறிக் 90 குழுத்தலைவர் எம்.கே.எம்.வாசித் ஆகியோர் உரையாற்றியதுடன் பொறியியலாளர் ஏ.ஆர.எம்.ஜஜாத் நன்றியுரையினையும் நிகழ்த்தினார்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் ஸோபா சம்பியன் கிண்ணத்தை கிறிக் 90 அணித்தலைவர் எம்.கே.எம்.வாசித்திடம் உத்தியோக புர்வமாக கையளித்ததுடன் அதிதிகளும் ஊடகவியலாளர்களும் கிறிக் 90 அணி வீரர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுகளை தொலைக்காட்சி வானொலி அறிவிப்பாளர் எஸ்.ரீ.ரோஸன் அக்தர் தொகுத்து வழங்கியிருந்தார்.

Post a Comment

0 Comments