Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழீழ அலங்காரத்துடன் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் வீதிஉலா


ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் வெளிவீதி உலா வந்துள்ளார்.மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பூங்காவன திருவிழா ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.மேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். மிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தபொழுது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு களித்தனர்.(15)

Post a Comment

0 Comments