Home » » செவ்வாய் கிரகத்தின் நிலத்துக்கு அடியில் 20 கிலோமீட்டர் பரப்பளவு நீர் ஏரி கண்டுபிடிப்பு: உயிர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை வலுப்பு

செவ்வாய் கிரகத்தின் நிலத்துக்கு அடியில் 20 கிலோமீட்டர் பரப்பளவு நீர் ஏரி கண்டுபிடிப்பு: உயிர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை வலுப்பு

செய்வாய் கிரகமானது முன்னொரு காலத்தில் சூடானதாகவும் நீர்த்தன்மை மிக்கதாகவும் இருந்ததாக பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் கருதிவந்தார்கள். ஆனால் 4.2 முதல் 3.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இது மற்றம் அடைந்தது. செவ்வாயின் காந்தப்புலன்கள் இல்லாமல் போனதால், சூரிய காற்றினால் இந்த மாற்றம் ஏற்பட்டது. இது இந்த கிரகத்தின் மேற்பரப்பை குளிரானதாகவும் வறட்சியானதாகவும் ஆகியது. இதனால் நீர் இங்கு திரவ வடிவில் இருப்பது சாத்தியமற்றதாக்கப்பட்ட்டது. ஆனால் முன்னர் இருந்த இந்த நீர் இந்த கிரகத்தின் நிலத்துக்கு உள்ளே எங்கேனும் திரவ வடிவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். இது பற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
1
இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்வதற்கான சாத்தியமான ஆதாரங்களை கண்டறிந்திருந்தது. இந்நிலையில், முதல் முறையாக தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.
ஏரிப் படுகை போன்ற நீர் ஆதாரங்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முன்னொரு காலத்தில் இருந்தது என்று நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டறிந்திருந்தது.
இருப்பினும், கிரகத்தின் காலநிலை அதன் மெல்லிய வளிமண்டலத்தின் காரணமாக குளிர்ந்து விட்டதால், நீரின் பெரும்பகுதி பனிக்கட்டியாக மாறிவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
“இது அநேகமாக மிகப்பெரிய ஏரி அல்ல” என்று ஆய்வு நடத்திய இத்தாலிய தேசிய கல்வி நிறுவனத்தின் ஆஸ்ட்ரோஃபிக்ஸ் துறையின் பேராசிரியர் ராபர்டோ ஓரோஸி கூறுகிறார்.
mars
தண்ணீரின் அடுக்கு எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை ஆராய்ந்தறிய முடியவில்லை. ஆனால், ஆராய்ச்சிக் குழுவினர் அது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
“இது உண்மையிலேயே தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் என்ற தகுதியை கொண்டுள்ளது. இது ஒரு ஏரிதான். பூமியில் பனிப்பாறைகள் உருகுவதால் பாறைக்கும், பனிக்கட்டிக்கும் இடையேயுள்ள இடைவெளியில் உருவாகும் அமைப்பு அல்ல” என்று கூறுகிறார் பேராசிரியர் ஓரோஸி.
செய்வாயில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பூமியை போல கடினமான சூழல் நிபந்தைகளின் கீழ் அங்கு சில உயிர்கள் வாழலாம் என்ற கருதுகோள் வலுப்பெற்றிருக்கிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |