Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேதின நிகழ்ச்சிகள் 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டாலும் இன்று கொழும்பில் நிகழ்வுகள் பல


சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டிய பேரணிகள் மற்றும் கூட்டங்கள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள போதும் கொழும்பிலும் , யாழ்ப்பாணத்திலும் கட்சிகள் சிலவற்றினதும் மற்றும் தொழிற் சங்கங்களினதும் மேதின நிகழ்வுகள் இன்று முதலாம் திகதி நடைபெறவுள்ளன.

இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடக்கவுள்ள போதும் தொழிற்சங்கவாதிகளை நினைவு கூறும் வகையில் அந்த கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பு அபயராம விகாரையில் நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.

முன்னிலை சோஷலிச கட்சி உள்ளிட்ட கட்சிகள் சிலவும் மற்றும் தொழிற்சங்கங்கள் சிலவும் கொழும்பில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

இதேவேளை ஜே.வி.பி கொழும்பில் 7ஆம் திகதி பிரதான மேதின பேரணி மற்றும் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள போதும் இன்றைதினம் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments