Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய சட்டம்! மீறுபர்கள் பற்றி அறிவிக்க விசேட இலக்கம்


முச்சக்கர வண்டிகளுக்காக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டண பற்றுச்சீட்டை விநியோகிக்கும் வகையிலான மீற்றர் பொறுத்தப்பட வேண்டுமென சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி கட்டண பற்றுச்சீட்டை விநியோகிக்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பாக மக்கள் 0112696890 என்ற இலக்கத்திற்கு முறையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளில் இந்த வசதிகளுடன் கூடிய மீற்றரை பொறுத்துவதற்காக 6 மாத கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த முதலாம் திகதியுடன் அந்த காலம் முடிவடைந்துள்ளதுடன் இன்று முதல் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments