Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாங்காடு பிரதானவீதியில் பாரிய வாகனவிபத்து இளைஞர் ஒருவர் பலி ! ஆறு பேர் படுகாயம் !

செ.துஜியந்தன்
மாங்காடு பிரதானவீதியில் பாரிய வாகனவிபத்து இளைஞர் ஒருவர் பலி ஆறு பேர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையின் மாங்காடு பிரதானவீதியல் இன்று 2018-04-20 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வானகவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் படுகாயங்களுடன் கஞவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன
வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஓந்தாட்சிமடம் இருந்து பயணித்த சிறிரக சொகுசுவாகனம் (டொல்பின்) ஒன்றில் மூன்று இளைஞர்கள் கொழும்பு நோக்கிப்பயணித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கோழிகள் ஏற்றிய டிப்பர் ஒன்று கல்முனை நோக்கிப் பயணித்தள்ளது. இவ் இரு வாகனங்களும் மாங்காடு பிரதானவீதியில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் டொல்பின் வாகனத்தில் பயணித்த இளைஞர்கள் ஒருவர் பலியாகியுள்ளார்.  ஏனையோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தில் ஓந்தாட்சிமடம் 36ஆம் வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த இராஜரெத்தினம் தினேஸ்காந்(27வயது) இளைஞர் உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்குள்ளான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அ.நிசாந்தன், (24வயது), ஓந்தாட்சிமடத்தைச் சேர்ந்த  சந்திரன்சேகரன்(28வயது), கோழிஏற்றிவந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த கல்முனைக்குடியைச்சேர்ந்த அக்பர்பவாதீர்(20வயது), எம்.கபீத்(25வயது), இதிகாஸ்றியால் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவத்தில் 30 வயதைத்தாண்டாத இளைஞர்களே சிக்கிக்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடிப் பொரிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments