இதன்படி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரை பரிந்துரைப்பதற்கு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுவதுடன் அது சாத்தியப்படாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் சபாநாயகர் கருஜய சூரியவின் பெயரை பரிந்துரைப்பதற்கும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று புதிய பிரதமர் ஒருரை தெரிவு செய்யும் நிலைமையொன்று ஏற்படுமாக இருந்தால் கருஜய சூரிய அல்லது ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரை பரிந்துரைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கி வெற்றிப் பெற பங்களிப்பு வழங்கிய குழுவொன்று ராஜித சேனராட்னவின் பெயரை பரிந்துரைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


0 Comments