Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை


தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக பொதுமக்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து சேவைகளை புகையிரத திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் ஒழுங்கு செய்துள்ளன.

இதற்கு மேலதிகமாக தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட புகையிரத சேவை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகி 17ம் திகதி வரை இடம்பெறும் என்று மேலதிக புகையிரத பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தறை, அனுராதபுரம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் வரை குறித்த புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் விசேட பஸ் சேவைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அதன் தலைவர் ராமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments