பிரேரணையை எதிர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுடன் இணைந்து நல்லாட்சி முன்னெடுக்கப்படும் என்றும், இது தொடர்பில் ஜனாதிபதியை இன்று சந்திக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற குழு அறையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
|
தனிநபரை அன்றி மக்கள் ஆணையை பாதுகாப்பதற்காக இந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாம் வாக்களித்தவாறு பல விடயங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது. நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எதிர்வரும் ஒரு வருட காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.2015 ஜனவரி 8ஆம் திகதி மக்கள் அளித்த ஆணையின் பிரகாரம் பல பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டியுள்ளது. கிராம மக்களுக்கு உணரக்கூடிய வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கிறோம். இந்தப் பிரேரணையைத் தோற்கடிக்க உதவிய சகலருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசாங்கத்தில் இருந்த சிலர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினர்களுடன் இணைந்து நல்லாட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் நாளை (இன்று 05) ஜனாதிபதியைச் சந்தித்து பேசவிருக்கிறேன் என்றார்.
|
0 Comments