Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 99வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முப்பெரும் நிகழ்வுகள் !!!!!

பட்டிருப்பு தொகுதியின் கல்வி வளர்ச்சியில் தொன்று தொட்டு வரலாறு படைத்துவரும் கல்வி வனப்பின் கலங்கரை விளக்கமாக திகழும்; களுவாஞ்சிக்குடி  பட்டிருப்பு தேசிய பாடசாலையின், 99வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  செவ்வாயன்று (04) அதிபர் கே.தம்பிராசா தலைமையில் மூன்று முக்கிய எளிமையான நிகழ்வுகள்  இடம்பெற்றன.

முதலாவதாக பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள். நலன் விரும்பிகள் ஆகியோர் பாடசாலையில் இருந்து, அலங்கார ஊர்தி சகிதம். எளிமையான எழுச்சிமிகு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை களுவாஞ்சிக்குடி நகர் வழியாக  பட்டிருப்பு சந்தி ஊடாக பாடசாலையை  வந்தடைந்தது.






இரண்டாவதாக மாபெரும் இரத்ததான வைபவம் ஒன்று இடம்பெற்றது இதில் பழைய மாணவர்கள், ஆசிரியர்களுடன் பாடசாலை மாணவர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர் இரத்ததானம் செய்தனர்.

மூன்றாவதாக அதிபர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் பாடசாலை மதில் வெளிப்பக்கமாக நடப்பட்டது.








தற்போது 2500 மாணவர்களுடனும் 165ஆசிரியர்களுடனும். 13ம் கல்வித்திட்டத்திற்கும் உள்வாங்கப்பட்ட பாடசாலையாகவும் தேசிய பாடசாலையாகவும் வளர்ச்சிப் படியில் முழுமை காட்டும் பாடசாலையாகவும் முன்னிலை வகிப்பது முக்கிய விடயமாகும்.

பல கல்விச் சந்ததிகளை பரவலாக  உருவாக்கிய இப் பாடசாலை இன்னும் 365 நாட்களில் நூறாண்டு காலம் வாழ்க என்ற வழக்கமான வாழ்த்திற்குப் பதிலாக ஆயிரம் ஆண்டுகள் என்று வாழ்த்த ஆயத்தமாகுவோம்.





பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் 99 வருட புர்த்தியினையும் 100 வருட ஆரம்பத்தையும் முன்னிட்டு இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியின் போது பட்டிருப்பு சித்தி வினாயகர் ஆலயத்தின் முன்னாலுள்ள பிரதான வீதியில் வைத்து அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் இப்பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் பெயரையும் புகழையும் ஈட்டித்தந்த மாணவ மணிகளுக்கு பட்டிருப்பு சித்தி வினாயகர் ஆலய பரிபாலன சபையினரும் பிரதேச மக்களும் மாலை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்த போது…..





































Post a Comment

0 Comments