Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெனமி இறாலினால் ஆபத்து இல்லை! - மஹிந்த அமரவீர

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெனமி (vannamei prawns) எனப்படும் இறால் இனம், எயிட்ஸ் உள்ளிட்ட பத்துவித பயங்கரமான நோய்களை பரப்புவதாக பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. அது முற்றிலும் பொய் என ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, மக்களுக்கோ நீர்நிலைகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எவ்வகை உயிரினத்தையும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோமென்றும் அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். 'வெனமி' யானது அதிக விளைச்சல் மற்றும் இலாபம் தரகூடியதொரு இறால் இனமாகும். இது இந்தியா, சீனா,வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இலங்கைக்கு அதிகம் இலாபம் கிட்டும் என்ற ஒரே நோக்கிற்காகவே இந்த இறால் இனத்தை அமெரிக்காவின் ஹவாய் பகுதியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். இதனை நாட்டுக்கு இறக்குமதி செய்து தருமாறு கோரியவர்களே இன்று இதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments