Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஸ பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேக விஞ்ஞாபனம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஸ பிரதிஷ்டா மஹா கும்பாவிஷேக விஞ்ஞாபனம்.

ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெரு விழா ஆரம்பம்.
ஈழத்து கண்ணகை அம்மன் ஆலயங்களில் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே செட்டிபாளையம் எனும் கிராமத்திலே வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் அமைதியான இயற்கை எழில் நிறைந்த பதியில் அமைந்துள்ளது இவ் ஆலயம்.
இவ் ஆலயம் வரலாற்று காலம் தொடக்கம் இன்று வரை ஒரு பிரதேசத்தின் ஆறு கிராமத்தின் மக்களின் ஒற்றுமையினை தொடர்ந்து பேனி பாதுகாத்துவரும் ஆலயமாக இவ்வாலயம் ஈழத்தில் மிளிர்ந்து வருகின்றது. அந்தவகையில் இவ்வாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை போன்ற கிராமங்களை உள்ளடக்கிய மக்களினால் தெரிவு செய்யப்பட்ட கிராமத்தின் பிரதிநிதிகளை உள்வாங்கியதாக இவ் ஆலயத்தின் நிருவாக கட்டமைப்பபு உள்ளது. இதன் அடிப்படையில் ஆளுமையான ஆலயத்தின் பரிபாலனம் சிறப்பாக செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.
அதன் அடிப்படையில் இவ்வாலயம் மட்டக்களப்பில் உள்ள இந்து ஆலயங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அந்தவகையில் சமூகத்திக்கிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பாரம்பரியத்தையும் மரபுகளையும், பண்பாடுகளையும், கலை கலாச்சாரங்களையும் தொடர்ந்து பேனிப் பாதுகாத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்மாகும்.
அத்தோடு இவ் ஆலயம் இப்பிரதேச கல்வி, பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் வகையில் பல்வேறு சேவைகளை சமூகத்திக்கு ஆற்றி வருகின்றது. அந்தவகையில் இவ்வாலயம் வருடா வருடம் இப்பிரதேசத்தில் பல்கலைக்கழகம் தெரிவாகும் ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பை தொடரும் வகையில் நிதி உதவிகளை பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்க ஒன்றாகும். அத்தோடு பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கற்றலுக்கான உதவிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும் .
அத்தோடு இவ்வாலயம் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் வயல் காணிகளை ஆலயத்திக்கு சொந்தமானதாக கொண்டுள்ளதால் இவ்வாலயம் வயல் காணிகளை வருடாந்தம் குறைந்த குத்தகைக்கு இவ் கிராமத்து மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் வயல் காணிகளை பெரும்போக நெற்செய்கைக்காக வழங்கி வருகின்றமையும் சிறப்பம்சமாக உள்ளது.
அத்தோடு வயல் அறுவடை முடிந்த பிற்பாடு அவ் கிராமத்து மேட்டு நில பயிர் செய்கை பண்ணும் விவசாயிகளின் நன்மைகருதி பயிர்ச்செய்கைக்காக வயல் காணிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே அப்படிப்பட்ட ஆலயத்தின் மஹா கும்பாவிஷேகம் எதிர்வரும் 20/04/2018 அன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து 21/04/2018 சனிக்கிழமை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 06 மணி தொடக்கம் பிற்பகல் 07 மணிவரை நடை பெற உள்ளமை சிறப்பம்சம் ஆகும் .
அனைத்து அம்மன் அடியார்களும் வருகை தந்து அம்மனின் அருள் பெற்று செல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.







Post a Comment

0 Comments