Advertisement

Responsive Advertisement

மட்/சிவாநந்தா வித்தியாலய தேசிய பாடசாலையின் இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற 21 ஆசிரியர்கள் கண்ணீர் மல்கிய வண்ணம் விடைபெற்றுச் சென்றனர்

கல்வியமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தற்போது நடைபெற்றுவருகின்றது.  இதற்கமைவாக மட்டக்களப்பு சிவாநந்த தேசிய பாடசாலையில்  கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு  04.04.2018 அன்று  கல்லூரியின்  அதிபர் திரு. யசோதரன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது விடைபெற்றுச் செல்லும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வாழ்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.

அத்துடன் சிவாநந்த தேசிய பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடமாற்றம் பெற்றுச் சென்ற 21 ஆசிரியர்களின் பெருமைகள் சாதனைகள்
ஒவ்வொருவராக நினைவுகூரப்பட்டது. அத்துடன் அவர்களது ஏற்புரையும் இடம்பெற்றது. மேலும்  இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களால் தேநீர் விருந்துபராசமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள் கண்ணீர் மல்கிய வண்ணம் விடைபெற்றுச் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.

Post a Comment

0 Comments