பன்குரொவ்ட் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் பந்தை கையாள்வதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
அவுஸ்திரேலிய வீரர் தனது வலது உள்ளங்கைக்குள் பந்தை வைத்திருப்பதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.அதன் பின்னர் அவர் தனது வலதுகைக்குள் வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை தனது பொக்கட்டிற்குள் வைப்பதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
இந்த விடயம் உடனடியாக களத்தில் நடுவர்களிற்கு தெரியப்படுத்தப்பட்துடன் அவர்கள் ஆட்டத்தை நிறுத்தி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பன்கிரொவ்ட் தனது உடைகளை சரிசெய்வதையும் பின்னர் சிறிய சதுர நிறமான மஞ்சள் பொருளை அவர் தனது டிரவுசரிற்குள் போடுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
இதேவேளை நடுவர்கள் அவுஸ்திரேலிய அணித்தலைவரையம் பன்கிரொவ்டையும் அழைத்து ஆடுகளத்தில் இது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
பன்கிரொவ்டை அந்த பொருள் என்னவென காட்டுமாறு அவர்கள் நடுவர்கள் கேட்டதை தொடர்ந்து அவர் கண்ணாடிகள் வைப்பதற்கான சிறிய உறையை காண்பித்துள்ளார்.
நடுவர்கள் ஆட்டத்தை அதன் பின்னர் தொடர்ந்துள்ள போதிலும் தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் அவுஸ்திரேலிய வீரர் பந்தின் உருவத்தை மாற்ற முயன்றுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளனர்.



0 Comments