எதிர்கால சந்ததியினரை நீங்கள் எவ்வாறு வழிநடத்தப் போகின்றீர்கள் என்பதை இன்று முதலே நீங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சி நிறைவில் ஆசிரியர்களுக்குரிய குறித்த பாடசாலை மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு,மட்டு தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ரீ.ரவி,மட்டு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி பாக்கியராஜா,கல்வியமைச்சின் அலுவலர்கள் ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தகவல் தொழிநுட்ப யுகத்தில் உலகம் கிராமமான நிலையில், ஆசிரியர்கள் நிறைவான விடயங்களை பல் துறை சார்ந்து கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கான பல தரப்பட்ட்ட அறிவுப் பசியை தேவைகளை நிறைவேற்றுபவர்களாக ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளினுடைய நாட்டினுடைய எதிர்காலத்தை அரசாங்கம் ஆசிரியர்களிடமே கையளித்திருக்கின்றது.
புனிதத்துவமான ஆசிரியர் தொழிலின் ஊடாக ஒவ்வொரு குழந்தைகளையும் சிறந்த சமூகப் பிரஜைகளாக உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் இடிருப்பதால் பொறுப்புடனும் பொறுமையுடனும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுப்பவர்களாக ஒவ்வொரு ஆசான்களும் இருக்க வேண்டும் என்றார்.
0 Comments