|
திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன.திருகோணமலை மாணவர்கள் ஐவரும் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் பிரதான நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
|
திருகோணமலை வாழ் பொது மக்களால், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிறைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மாணவர்களின் உறவுகள், நண்பர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். படுகொலை செய்யப்பட்ட மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களின் புகைப்படத்திற்கு முன்பாக விளக்கேற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
|


0 Comments