சிரியாவில் உள்ள ரஸ்ய விமானதளத்தை இலக்குவைத்து கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் ஏழு ரஸ்ய விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் எறிகணை தாக்குதலில் 4 எஸ்யு குண்டுவீச்சு விமானங்களும் இரண்டு எஸ்யு 35 எஸ் போர்விமானங்களும் ஓரு போக்குவரத்து விமானமும் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ரஸ்யாவின் கொமெர்சென்ட் நாளிதழ் ஆயுதகிடங்கும் வெடித்து சிதறியதாக குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஹெமெய் தளத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரஸ்ய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட தளத்திற்கு கடந்த வாரம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவரது விஜயத்தின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


0 Comments