அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமைக்கான தகுதியை பெறாது முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
இவர்களை மீண்டும் திருப்பி அழைப்பதற்கான தேவையான விமான சேவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்


0 Comments