Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊடரங்கு நீக்கம் - இராணுவம், அதிரடிப்படை குவிப்பு!

காலி பொலிஸ் பிரிவின் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. வெலிபிடிமோதர, மஹபுகல, ரக்வத்தை, கிங்தொட கிழக்கு, கிங்தொட மேற்கு, பியதிகம மற்றும் குருந்துவத்தை ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்தப் பகுதிகளில் பொலிஸாருடன் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments