Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விகிதசாரா முறை மற்றும் தொகுதி முறையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக தேர்தல் தொகுதியை நிர்ணயம் செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய குழுவொன்றை நியமித்துள்ளார்.
கலாநிதி கே.தவலிங்கம் இதன் தலைவர். கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, பி.எம்.சிறிவர்த்தன, எஸ்.விஜயசந்திரன் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவார்.
தேர்தல் தொகுதியை நிர்ணயம் செய்வது தொடர்பில் அரசியல் கட்சிகள், பொது மக்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இக்குழு கோரியுள்ளது. 

Post a Comment

0 Comments