Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள்

எதிர்வரும் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு மாவீரர் தினங்களை இம்முறை சிறப்பாக அனுஸ்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாவீரர் தினத்தினை அனுஸ்டிக’கும் வகையிலான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பட்டிப்பளை பிரதேச பொதுமக்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த முன்னாயத்த பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
IMG_8305IMG_8307IMG_8309IMG_8311IMG_8313

Post a Comment

0 Comments