Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தப்பியோடிய ஆவா குழுத் தலைவர் மடக்கிப்பிடிப்பு

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில்சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதிமன்றில் வேறு வழக்கில் ஆஜர் செய்யப்பட்டநிலையில் நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில்இடம்பெற்றிருந்தன.
இவ்வாறு பொது மக்கள் மீதான வாள்வெட்டுக்களின் தொடராக பொலிஸார் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த்து.
இதனையடுத்து விசேட பொலிஸ் குழுக்கள் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் பலரும் களமிறக்கப்பட்டு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போதே நிஷா விக்ரர் என்ற நபரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தி பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு வாள்வெட்டுச் சம்பவத்திற்காக யாழ் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியிருந்து. ஆனாலும் அவரை யாரும் நேற்று பிணை எடுக்கவில்லை என்று தெரியவருகிறது.
அதேநேரம் வேறு பல வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் நீதிமன்றங்களில் வழக்குகளும் அவருக்கு இருக்கின்றது.
இதற்கமைய மல்லாகம் நீதிமன்றில்இருக்கின்ற ஒரு வழக்கிற்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இன்று காலை மல்லாகம் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றிலிருந்த கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றிலிருந்து தப்பியோடியுள்ளார்.
இவ்வாறு நீதிமன்றிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதன் போது சுதாகரித்து கொண்டு தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸாரும் சிறைச்சாலைஅதிகாரிகளும் சில மணி நேரத்திலேயே அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

Post a Comment

0 Comments