மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலான விசேட செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மேற்கொண்டுள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்துமுதன் முறையாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு பாடசலை அதிபர் எஸ்.அருள்பிரகாசம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






0 Comments