பட்டிருப்புக் கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கோட்டத்திற்குட்பட்ட மட்/ பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள் கவடி விளையாட்டில் தேசியமட்டச் சாதனை புரிந்துள்ளனர். 17 வயதுக்குட்பட்ட கபடி விளையாட்டு அண்மையில் தேசிய மட்டத்தில் நடைபெற்றபோது மட்/ பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகளுக்கு எதிராக பண்டத்தரிப்பு கெசிந்தா மகாவித்தியாலய மாணவிகளுக்கும் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் மட்/ பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள் வெற்றியீட்டி தேசிய மட்டச் சாதனை படைத்துள்ளனர். இச் சாதனையைக் கொண்டாடுமுகமாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்குச் சென்ற கல்விச் சமுகத்தினர் வெற்றியீட்டிய மாணவர்களை மாலையணிவித்து கௌரவித்து பாடசாலை வரை அழைத்து வந்தனர்.
இம் மாணவர்களை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர். ஆர்.சுகிர்தராஜன் பட்டிருப்பு வலயத்தில் வைத்து கைலாகு கொடுத்து பாராட்டினார். அத்துடன் பாடசாலையின் அதிபர் சு. உதயகுமார், உடற்கல்வி ஆசிரியர் எஸ். புவனேந்திரகுமார் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராசா, போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.








0 Comments