ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர் பிரதியதிபர்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்களால் மகத்தான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதன் சிறப்பம்சமாக காலையில் நுழைவாயிலில் இருந்து ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தரும் போது தாம்புலம் கற்கண்டு என்பன கொடுத்து பன்னீர் தெளித்து விபுதி சந்தணம் இட்டு ஆசிரியர்கள் அன்பாக வரவேற்கப்பட்டனர். பின்னர் பாடசாலை ஒன்றுகூடலின் போது ஆசிரியர்களின் மகிமை பற்றி மாணவர்களால் எடுத்துக்கூறப்பட்டது. பின்னர் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாடுமீன் சிறிஸ்கந்த ராஜா சிறப்புரை ஆற்றினார். பின்னர் பாடசாலைச் சமூகத்தினரின் வேண்டுகோளிற்கு இணங்க வருகை தந்திருந்த பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுகிர்தராஜா அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக் கூறியதோடு சிறப்புரை ஆற்றினார் அதில் ஆசிசிரியர்கள் மாணவர்களாக இருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் ஏணியாகவும் தோணியகவும் இருக்க வேண்டும் எனவும் கூறினார். இந்ந்கழ்வின் ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப்பாளர் வரதராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.







0 Comments