நாட்டில் பிற்பகல்வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடைபருவ பெயர்ச்சி மழை ஆரம்பமாகின்யே இதற்கான காரணமாகும். சில இடங்களில் குறிப்பாக மத்திய, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சுமார் 100 மில்லிமீற்றருக்கு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மாகாணம் , புத்தள மாவட்டம் மற்றும் கிழக்கு , தெற்கு மாகாணங்களின் கடற்கரையோரங்களிலும் காலைவேளைகளில் ஓரளவு மழைபெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments