Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு அனுஸ்டிப்பு

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
சிறுவர்களினதும் முதியவர்களினதும் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் இந்த சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
சந்ததி ஒன்று புதிய சந்ததிக்காக என்னும் தலைப்பில் இம்முறை சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சும் ஏறா{ர்ப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
ஏறா{ர்ப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி ந.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முதியவர்களும் சிறுவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது முதியவர்களினால் உற்பத்திசெய்யப்பட்ட கண்காட்சியொன்றும் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது சிறுவர்கள் முதியவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில்வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்களும் முதியவர்களும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
DSC03320DSC03330DSC03259DSC03192DSC03174DSC03171

Post a Comment

0 Comments