வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செபல் பிரிவு சிறையில் உள்ள மரண தண்டணை மற்றும் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 150 பேர் வரையிலான கைதிகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண தண்டனைகளை ஆயுட் தண்டனையாகவும் , ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 20 வருட சிறைத் தண்டனையாக தண்டனையை குறைக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்படி நேற்று பகல் முதல் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 Comments