2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
|
இலங்கை விடயத்தில், பல்வேறு நல்லிணக்கப் பணியகங்களை அமைப்பதும், முன்னேற்றங்கள் பற்றிப் பேசுவதும், 2015ஆம் ஆண்டு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணையானது அல்ல, என்ற விடயத்தில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள அரசுகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்தார்.
‘நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள், தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படு த்தப்படுவதைக் காணவேண்டிய தேவை உள்ளது. நீதி கிடைப்பதற்கான ஆதாரங்களை அவர்கள் காண வேண்டும்.ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒருமனதான நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெருமளவில் தோல்விஅடைந்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக மொழியால் பேசுவதை விட, அதிகமாகச் செய்ய முடியும் என்பதை இலங்கை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
|
0 Comments