நாடாளுமன்றம் தற்போது கெட்டவர்களின் கூடாரமாக மாறியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மஹியங்கனை, முதியங்கனை விகாரையினால் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
|
நாட்டின் மரியாதைக்குரிய இடமாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும். ஆனால் இன்று வளரும் பிள்ளைகளை அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறுமளவுக்கு நாடாளுமன்றம் தரம் தாழ்ந்துவிட்டது. கெட்டவர்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் பௌத்த தேரர்களை காவியுடைக்கார்கள் என்று மரியாதையற்றுப் பேசுகின்றார். இது பெளத்த நாடு. தேரர்கள் இந்நாட்டின் காவல் தெய்வங்கள். வரலாற்றுக் காலம் தொட்டு நிலவி வரும் அந்தப் பாரம்பரியத்தை மதித்து பேசுவதற்கு அமைச்சர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அஸ்கிரிய மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.
|
0 Comments