Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து திரும்புகிறார் பீனிக்ஸ் அஜித்!

‘விவேகம்’படப்பிடிப்பில் கரடுமுரடான மலைப்பாதைகளில் ‘ரிஸ்க்’ எடுத்து பல காட்சிகளில் நடித்திருந்தார் நடிகர் அஜித்குமார். அவரது உடலில் அறுவை சிகிச்சை நடக்காத இடங்களே இல்லை என சொல்லும்படியாக பல இடங்களில் அடிப்பட்டு ‘ப்ளேட்’ வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் இதை போல சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியும் அதற்காக அஜித் என்றும் பயந்து பின் வாங்கியதே இல்லை. ஏற்கெனவே ‘வேதாளம்’ படப்பிடிப்பில் அவரது கால் மூட்டில் அடிப்பட்டு மூட்டு நழுவிப் போனது. உடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அ|றிவுறுத்திய போது தன்னால் படப்பிடிப்பு நின்று போய்விடக் கூடாது என்று சொல்லி காயம்பட்ட காலுடன் ஐஸ் கட்டிகளால் ஒத்திடம் கொடுத்துக் கொண்டே தொடர்ந்து பாடல் காட்சியில் நடித்து கொடுத்தார் அஜித். அதன் பின் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வில் இருந்த அவர் மறுபடியும் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்தார். எதிர்பார்த்ததை போலவே இந்தப் படத்திலும் அவருக்கு இரண்டு இடங்களில் அடிப்பட்டன. அதற்கான அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் அவர் வீடு திரும்ப இருக்கிறார் என அவரது நெருங்கிய வட்டாரம் தகவல் தருகிறது.

Post a Comment

0 Comments