2019இல் இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் பேராசிரியரும், சிரேஸ்ட மனித உரிமைகள் ஆர்வலருமான போல் நியூமன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.<இந்த நிலையில் அவர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2019இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்றது. இவ்வாறு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தின் போது எதுவும் செய்யவில்லை எனில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்தை பாதுகாப்பு சபைக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
0 Comments