Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிணற்றில் விழுந்த அரசியல்வாதியின் மகள்! - டெங்கு ஒழிப்பு பிரசாரத்தின் போது சம்பவம்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதியின் மகள் ஒருவர் மூடி வைக்கப்படட கிணற்குள் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக செயற்பட்ட அரசியல்வாதியின் பாதுகாப்பு பிரிவினரால் உடனடியாக அவர் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார்.
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையினை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்கள் சிலர் சென்றுள்ளனர். இதன்போது அவர் கிணற்றுக்குள் விழுந்து காட்சியும் பதிவாகியுள்ள நிலையில் அதனை உடனடியாக அழிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் போது கிணற்றுக்கு மேல் மூடப்பட்டிருந்த பாதுகாப்பு மூடியின் மீது கால் வைத்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments