|
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உருவான பின்னர், மஹிந்த ராஜபக்ஷ முதன் முறையாக பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பினார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, "உள்ளூராட்சி சபை தேர்தல் எப்போது இடம்பெறும்" என கேள்வி எழுப்பியிருந்தார்.
|
அதற்கு, உள்ளூராட்சி சபை தேர்தல், எதிர்வரும் 2018 ஜனவரியில் நடாத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார். கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, எதிர்வரும் 2018 ஜனவரி மாதமளவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது உகந்தது எனும் தீர்மானத்தை தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
|


0 Comments