Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மானிப்பாய் பகுதியில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவன் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments