Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியின் ஆசிரியை செல்வி ஜெயந்தி கதிரமலை இன்று ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

 ஆசிரியையான ஜெயந்தி கதிரமலை அவர்கள் 22.09.1957 அன்று  அவதரித்து தனது ஆரம்பக்கல்வியை 1963ம் ஆண்டு  தம்பலகாமத்தில் கற்றார். பின்னர் பல்வேறு பாடசாலைகளில் தனது கல்விக் கற்று 01.04.1992 இல் தன்னை ஆசிரியப் பணியில் இணைத்துக் கொண்டார். இவர் மட்/ பட் /முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தை ஆரம்பக் கல்வி ஆசிரியையையாக பொறுப்பேற்று அங்கு  20.01.2001 வரையான  09 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். அதன் பின்  இடமாற்றம் காரணமாக 21.01.2001 இல் இருந்து 22.09.2017 வரை 16 ஆண்டுகள் மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியில் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ளார்.  இன்று தனது 60 வது வயதில் தனது பிறந்த தினத்தில் ஆசிரியை அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.  இவர் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியை மாணவர்களுக்கு கற்பித்து பல பரம்பரையினரை உருவாக்கியுள்ளார். அத்துடன் மெலிந்த சுறுசுறுப்பான குணவியல்புகளை உடைய இவர் இணைப்பாடவிதானச் செயற்பாட்டிலும் பாடசாலைக்கு அளப்பரிய சேவையினைச் செய்துள்ளார். இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்கு சிங்களப் பாடத்தையும் இவர் கற்பித்தமை மிக முக்கியமான அம்சமாகும்.  பாடசாலையில் நடைபெறுகின்ற அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பினை வழங்கியவர். அத்துடன் பாடசாலை நிர்வாகத்திற்கு லீவு தொடர்பான சேவைகளை மிகக் கச்சிதமாக செயற்படுத்தியவர்.   ஒய்வு பெற்ற அதிபர் பொன் வன்னிய சிங்கம் அவர்களது காலத்தில் லீவு தொடர்பான பணியினைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.  தவிர்க்க முடியாத காரணங்களளால் இதில் இருந்து விடுபட்டு ஓய்வு பெறும் வேளையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுத்தவர்.

    இன்று இவருக்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்துக் கௌரவித்தனர். அத்துடன் பொன்னாடை போர்த்து கௌரவித்தனர் வாழ்த்துப் பாவும் வழங்கப்பட்டது. அன்னாரின் சேவைகளை அதிபர் க.தம்பிராஜா, பிரதி அதிபர் ஜனேந்திர ராசா, பிரதி அதிபர் நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்,  கல்வி சாரா ஊழியர்கள் இவரின் பணிகளை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டமையினையும் படங்களில் காணலாம்.



















Post a Comment

0 Comments