ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கான இரண்டாவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனித்தா, 3.46 மீற்றர்கள் உயரம் பாய்ந்து, புதிய சாதனை படைத்தார். தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறும தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 3.34 மீற்றர் உயரத்தில் கோல் ஊன்றிப் பாய்ந்து தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கோல் ஊன்றிப் பாய்தலில் புதிய சாதனை ஒன்றை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரியைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் நாட்டியுள்ளார்.(15)
0 Comments