மட்டக்களப்பு செங்கலடியில் இனம் காணப்படாத ஒரு வகை மிருகம்
ஒன்றை பழைய செல்லம் தியட்டர் கட்டிடத்திற்குள் வைத்து பொதுமக்கள் பிடித்துள்ளனர்.
குறித்த மிருகம் நீர் நாய் போன்று உள்ளதனால் அது குறித்து வனவிலங்குகள் பாதுகாப்புஅதிகாரிகளுக்கு அறிவித்து அதனை இரவு 7 மணியளவில் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களும் குறித்த விலங்கை அடையாளம் காணமுடியவில்லை என்று கூறி வாகனத்தில் ஏற்றிகொண்டு செல்ல முயற்சித்த வேளை குறித்த விலங்கு அவர்களிடமிருந்து சாதுரியமாக தப்பிச் சென்றுள்ளது.
ஏறாவூர் நான்காம் குறிச்சிப் பக்கமாக தப்பிச்சென்ற குறித்த மிருகம் மனிதர்களை கடிப்பதற்கு பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. படத்தில் உள்ளதைப் போன்ற மிருகத்தை காண்பவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
0 Comments