முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றரை பொறுத்தவதை கட்டாயமாக்கும் சட்டத்தை செயற்படுத்துவதற்கான காலத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக வீதி போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதனை அமுல் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments