வடக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் தொல்லியல் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“ வடக்கு மாகாணத்தில் ஏராளமான இடங்கள் பெயர்மாற்றம் அடைந்துள் ளன. கடந்த 1975ஆம் ஆண்டு வடக்கில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லா இடங்களினதும் பெயர்களை சேகரித்து வருகின்றேன். அதன் அடிப்படையில் ஏன் பெயர்களை மாற்றினீர்கள் என்பது தொடர்பில் ஆராயவுள்ளேன்.
முன்னைய காலத்தில் இருந்த தமிழ்ப்பெயர்களை மாற்றுவதற்கான காரணம் என்ன என சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் விளக்கங்க ளைக் கோரவுள்ளேன். தொல்லியல் சம்பந்தமாக நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. 13 ஆவது திருத்தச்சட்டத்தின் படி நாம் மத்திய – அரசிற்குரியவர்கள். ஆகவே அவர்க ளிடம் பேசவேண்டிய தேவையுள்ளது. எம்முடன் கதைக்கும் போது நன்றாக கதைக்கின்றனர். எனினும் ஒரு நடவ டிக்கையும் இடம்பெறுவதில்லை.
உலக வங்கி யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து 55 ஆயிரம் மில்லி யன் அமெரிக்க டொலர்கள் ஊடாக திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றது . அவர்கள் கொழும்பு அரசுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கலாம். மந்திரிமனை போன்ற இடங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உலக வங்கி தலையிடுவதால் அவர்கள் அபிவிருத்தி செய்யவருகின்றனர்.
இராணுவத்தினர் வெளியேற வேண்டும். அவர்கள் வர்த்தக இடங்கள், மக்கள் காணிகள், சுற்றுலாத்துறை இடங்களை கையகப்படுத்தி வைத்துள்ள னர். இவற்றை நாம் அரசியல் ரீதியாகவே கையாளவேண்டும் என்றார்
0 Comments