மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை கண்டித்து சம்மாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை, சமூக சேவை அமைப்புக்கள் என்பன பொது மக்களுடன் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.ஜூம்ஆ தொழுகையின் பின்னர் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை, கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
0 Comments