Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணசபையில் ‘20’ விவாதிக்கப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது –வியாழேந்திரன் எம்.பி

20வது திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை விவாதிக்காத நிலை ஒருவித சந்தேகத்தினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கருத்தினை தெரிவித்துள்ள அவர்,அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மாகாணசபைகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் மாகாணசபையின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என நாங்கள் கோரிவருகின்றோம்.மாகாணசபை அதிகாரங்களினை அதிகமாக வழங்கவேண்டும் என பல போராட்டங்களையும் நடாத்தியுள்ளோம்.
மத்திய அரசாங்கமானது மாகாணசபைக்குரிய அதிகாரங்களை கையில் வைத்துள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் மாகாணசபையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமை புதிய ஆட்சியில் களையப்பட்டு மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.அதன்காரணமாகவே நல்லாட்சியை மக்கள் ஏற்படுத்தினார்கள்.
ஆனால் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று இந்த நல்லாட்சி அரசாங்கமும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதில் காலம்தாமதிப்பது மட்டுமல்லாமல் மாகாணசபைகளை கட்டுப்படுத்துமளவுக்கு இன்று உள்ளது.பாராளுமன்றம் மாகாணசபையினை கட்டுப்படுத்தும் நிலைக்கு இன்று வந்துள்ளது.
மாகாணசபையில் உள்ள முதலமைச்சர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் தங்களுக்கான அதிகாரங்களை கோரி நிற்கும்போது அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றம் உள்ளது.இந்த நிலையில் இலங்கையில் உள்ள மாகாணசபைகளின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தென் மாகாணம் மற்றும் ஊவா மாகாணசபைகளில் 20வது திருத்த சட்ட மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.அங்கு அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.அது திருத்தப்படவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.வடமாகாணசபை முதலமைச்சர் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்கள் அந்த திருத்த சட்டத்தினை நிராகரித்துள்ளனர்.வடமாகாணசபை அமர்வில் அதுபேசப்பட்டுள்ளது.ஆனால் அது கிழக்கு மாகாணசபையில் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்படவும் இல்லை.
வடகிழக்குக்கு அப்பால் உள்ள மாகாணசபைகள் தெளிவாக உறுதியாக அதனை நிராகரித்துள்ள நிலையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அதிகமாக வழங்கவேண்டும் என அதிகளவில் குரல்கொடுத்த நாங்கள் அது தொடர்பில் விவாதிக்காமை மக்கள் மத்தியில் பலத்த சந்கேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்குமாகாணசபையில் முதலமைச்சரை உருவாக்குவதில் மிகமுக்கியமாக பங்குவகித்தவர்கள்.11தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபையில் உள்ளனர்.ஏழு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து இன்று கிழக்கு மாகாணசபையின் ஆட்சில் உள்ளனர்.
மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்ததும் அதனைக்கலைத்துவிட்டு தேர்தலை நடாத்தவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் உறுதியாகவுள்ளனர்.இந்த நிலையில் 20வது திருத்த சட்டத்தினை நேற்றைய அமர்வில் கொண்டுவரப்படாததும் அது தொடர்பில் விவாதிப்பதை தவிர்த்து 11ஆம்திகதி விவாதிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு மாகாணசபையில் சிலர் இந்த திருத்த சட்டத்தினை ஏற்றுக்கொள்கின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மாகாணசபையினை கட்டுப்படுத்தும் விடயத்தினை தேர்தலின் காலத்தினை தள்ளிப்போடும் நிலையினை கிழக்கு மாகாணசபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் விரும்புகின்றார்களா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
வடமாகாணசபையில் 20வது திருத்த சட்டம் விவாதிக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையில் அது விவாதத்திற்கு கூட கொண்டுவரப்படாத நிலையானது 20ஆவது திருத்ததிற்கு ஆதரவளிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.
பாராளுமன்றம் மாகாணசபையினை கட்டுப்படுத்தும்சட்ட மூலங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டும்.அதில் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments