Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்

மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று(09) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
உலகத் தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் பிரதேச மக்களின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்
ஆலய வழிபாட்டு இடம்பெற்றதுடன் படுகொலையான உறவுகளிற்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துதலுடன் நினைவேந்தல் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது.
பிரதேச மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் பிரதிநிதிகள் என அனைவரும் படுகொலையான உறவுகளிற்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 9 ஆம் திகதி இன்றைய நாளில் மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இவற்றில் 5 பிள்ளைகள் விசேட தேவையுள்ள பிள்ளைகள்.மேலும் 42 பிள்ளைகள் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகள்.
85 பேர் பெண்கள், 28 பேர் முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை சம்பந்தமாக சென்ற வருடம் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெற்று ஒரு வருடகாலமாக இவற்றுக்கான எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
சம்பவம் இடம்பெறும் முதல் நாள் அன்று இராணுவ முகாம்களிலிருந்து இராணுவ உளவாளிகள் நோட்டமிட்ட நிலையில் நன்கு திட்டமிட்டு அடுத்த நாள் அதாவது (09.09.1990) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இராணுவ சீருடையணிந்தவர்களும் சத்துருக்கொண்டான் முகாமுக்கு வருவார்கள் அங்கே உங்களுக்கு கூட்டம் ஒன்று இருக்கின்றது என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.
நடக்க முடியாதவர்களை இராணுவ லொறிகளில் ஏற்றிச்சென்று அங்கு கொண்டு இவர்களை ஆண்கள் வேறு, பெண்கள் வேறு பிள்ளைகள் வேறாக பிரிக்கப்பட்டனர்.
சிங்கள இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்தே இந்த கோர தாண்டவம் அரங்கேற்றப்பட்டது.
இவற்றுக்கெல்லாம் தயாரான நிலையில் அன்று மாலை 7.00 மணியளவில் இவர்கள் வாளினால் வெட்டியும், கத்தியினால் குத்தியும் துப்பாக்கிகளினால் சுடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட மக்கள் குழிகளில் தூக்கி வீசப்பட்டனர்.
அன்று மாலை 8.00 மணியளவில் பெரும் கூக்குரல் சத்தமும் சிறுவர்களின் மரண ஓலச் சத்தமும் எங்கும் எதிரொலிச்ச வண்ணம் காணப்பட்டது.
மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்
இவ்வாறு வெட்டி குழியில் வீசப்பட்ட ஒருவர் அக்குழியில் விழாமல் துரதிஸ்ட வசமாக வெளியில் வீசி எறியப்பட்டார்.
இவ்வாறு வெட்டு காயங்களுடன் தடுப்பு வேலியருகே வீசப்பட்ட நபர் தவன்று சென்று அருகே இருந்த பற்றைக்குள் ஒழிந்து, மறுநாள் காலை வேளையில் அமெரிக்க மிசன் பாதர் மூலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் உயிருடன் தப்பி சென்றுவிட்டதை அறிந்த சிறிலங்கா இராணுவ உளவாளிகள் வைத்தியசாலையயில் வைத்து அவரை கடத்த முற்பட்டனர். இதனை அறிந்த பாதர் அவரின் பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
இவர் மூலமாக பல தகவல்கள் வெளிவந்தன. பின்னர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் வினவப்பட்டது.
இதற்கு அவர்கள் கூறிய பதில் இங்கு யாரையும் நாங்கள் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை என்பதே இவர்களின் பதிலாக அமைந்தது.
இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ இக் கொலைக்கான முக்கிய சுத்திரதாரியாக இனம் காணப்பட்டனர்.
மட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம்
இன்று வரை இக்கொலைக்கான எவ்வித விசாரணையும் நடைபெறவுமில்லை.எனவே இவ்விசாரணை மீண்டும் இந்த நல்லாட்சியிலாவது நடைபெறுமா? அல்லது மூடி மறைக்கப்படுமா? என பிரதேசவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இவை அனைத்தும் ஐக்கிய நாட்டு சபைக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படுமா? என நினைவேந்தல் நிகழ்வில் குறித்த சம்பவ தினம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதேச வாசியினர் கோரினர்.
இதேவேளை இப்படுகொலைகளுக்கு நீதி வேண்டித்தருமாறு உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஏ.யோன்சன் மற்றும் பிரதேச மக்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் அழுத்தம் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments