20வது திருத்த சட்டம் மூலம் தோற்கடிக்கப்பட்டு அதன் மூலம் தேர்தல் ஒன்று வந்து தெற்கில் மாகாணசபை ஒன்றை கூட்டு எதிரணி கைப்பற்றுமானால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமல்போகும் சூழ்நிலை ஏற்படலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பொதுநூலக திறப்புவிழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
20வது திருத்த சட்டத்தினை சிலர் பூதமாக பார்க்கின்றனர்,சிலர் கடவுளாக பார்க்கின்றனர்.நாங்கள் அதனை எப்படி பார்க்கப்போகின்றோம் என்பதே எங்களுக்கு முன்பாக இருக்கும் கேள்விக்குறியாகும்.
20வது திருத்த சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பது தெரியாத நிலையிலேயே சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அதற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.
கிழக்கு மாகாணசபை அது தொடர்பில் விவாதிக்கவில்லை அதனால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை சந்தேககண்கொண்டு பார்க்கின்றேன் என்று கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.தயவுசெய்து அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் ஒரு விடயத்தினை முதல் நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அவற்றினை விளங்கிக்கொண்டால்தான் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தமுடியும்.
வடமாகாணசபையில் 20வது திருத்த சட்டம் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக அந்த உறுப்பினர் கூறியுள்ளார். வடமாகாணசபையில் 20வது திருத்த சட்டம் விவாதிக்கப்படவில்லை.மாகாணசபை கூடி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவைத்தலைவர் தற்போது கொண்டுவரும் 20வது திருத்த சட்டத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதில் திருத்தத்தினை ஏற்படுத்தி திருப்பி அனுப்புவீர்புகளானால் அதனை மீள் பரிசீலனை செய்வதற்கு தயாராகவிருக்கின்றோம் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணசபை வடமாகாணசபைபோல் அல்லாமல் மூவினமும் வாழும் மாகாணமாக இருக்கின்றது.கடந்த 29ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் 20வது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன் உள்ளாந்தம் எங்களுக்கு விளங்கவில்லை.எங்களுக்கு முதல் தெளிவாக விளங்கவேண்டும்.அதனை நாங்கள் பிற்போட்டோம்.கடந்த 06ஆம் திகதி அதனை பிற்போட்டோம்.சரியான விளக்கம் இல்லாத காரணத்தினாலேயே அதனை நாங்கள் பிற்ப்போட்டோம்.
20வது திருத்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக அறிந்தோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதில் ஒரு திருத்தத்தினை செய்து உயர்நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
20வது திருத்த சட்டம் மாகாணசபை தேர்தல்களில் ஒரு மாற்றத்தினைக்கொண்டுவரவுள்ளது.அனைத்து மாகாணசபைக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடாத்துவதும் அந்தவேளையில் ஒரு மாகாணசபை கலைக்கப்படுமானால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதையே அந்த 20வது திருத்த சட்டமூலத்தில் திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நாங்கள் சற்று ஆளமாக சிந்திக்கவேண்டும்.
இந்த 20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால் இந்தமாதத்துடன் கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும்.கிழக்கு மாகாணத்தின் தேர்தல் தொடர்பில் இந்த நாட்டில் உள்ள தேசிய அரசாங்கம் எந்தகவலையும் கொள்ளாது.
ஏனைய மாகாணங்களில் தேர்தல்கள் வரவுள்ளது.ஊவா மாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் 20வது திருத்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.தற்போது பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாறி இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காண்பதற்கான நகர்வுகளை செய்துகொண்டிருக்கும் இந்தவேளையில் தெற்கில் அதனை குழப்புவதற்கு சில சக்திகள் கங்கணம்கட்டிக்கொண்டுள்ளனர்.
பண்டா – செல்வா ஒப்பந்தம் உட்பட இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்குவதற்கு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அன்றை தேசிய கட்சிகள் எதிர்த்தன் காரணமாக 60வருடகாலமாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களையும் அழிவுகளையும் கணக்கிடமுடியாது.
ஆனால் இன்று காலம் கைகூடிவரும் நிலையுள்ளது.இரண்டு தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து நல்லாட்சி என்னும் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளதானது எமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பாகும்.இந்த நிலையில் இந்த நாட்டில் 10வருடமாக கொடுங்கோல் ஆட்சியை நடாத்திய மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இணைந்துள்ள 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணி என்ற பெயரில் இந்த அரசியல் யாப்பினை குழப்புவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர்.அதுமட்டுமன்றி மகிந்தவின் தம்பியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் எலிய என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பும் புதிய அரசியலமைப்பினை எதிர்க்கும் ஒரு அமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஒரு நிரந்தர தீர்வு வராமல்விட்டால் 20 வருடங்களுக்கு பின்னர் எமது சந்ததிகள் மீண்டும் ஒரு அழிவினை சந்திக்கவேண்டிய நிலைக்கு வரும்.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குமு; பாராளுமன்ற அரசியல் நடவடிக்கை குழுவுக்கு திட்டங்கள் வழங்கப்பட்டு மீண்டும் பின்னிணைப்பு ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பினை உருவாக்குமு; பாராளுமன்ற அரசியல் நடவடிக்கை குழுவுக்கு திட்டங்கள் வழங்கப்பட்டு மீண்டும் பின்னிணைப்பு ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இணைந்த மாகாணத்தில் ஒரு சமஸ்டி தீர்வு மட்டுமன்றி மாகாணசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் ஒரு செனட்சபை உருவாக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் 20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்படாமல் தேர்தல் ஒன்று நடைபெறுமாகவிருந்தால் ஊவா, சப்ரகமுவ மாகாணசபையில் ஒரு மாகாணசபையினை கூட்டு எதிர்க்கட்சி கைப்பற்றுமாகவிருந்தால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் செயற்பாடு தடுக்கப்படலாம்.அதன் காரணமாக தமிழ் மக்களு;கான நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் செய்யப்படும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் எமது இளைஞர்களை பலிகொடுக்கும் சூழ்நிலைகளும் ஏற்படலாம்.நாங்கள் ஆண்ட இனம்,அழிவுகளை எதிர்கொண்ட இனம்,அடக்கியொடுக்கப்பட்ட இனம்,போராடிய இனம் மீண்டும் ஒரு அழிவுக்கு தயாரில்லை.எதிர்கால சந்ததியினரை பலிகொடுப்பதற்கு நாங்கள் தயாராகவிருக்ககூடாது.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்ததினால் மூவினங்களும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளன.கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீண்டும் இந்த நாடு சந்திப்பதற்கு தயாராக இல்லை.
நாங்கள் அரைகுறை விடயங்களை தெரிந்துகொண்டு அறிக்கைகளை விடாமல் எதிர்கால அரசியல்வாதிகள் தீர்க்கதரிசனமான அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும்
0 Comments