Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குருபெயர்ச்சி பலாபலன்கள்-2017...!


குருபெயர்ச்சி பலாபலன்கள்-2017..
நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 14 நாள் 02.09. 2017 சனிக்கிழமை பகல் 10 .53 அளவிலேயே குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் இராசிக்கு பிரவேசிக்கிறார். இதன் காரணமாக ராசிகளுக்கான பலாபலன்களை பார்ப்போம் .

1.மேஷ ராசி 
அஸ்வினி , பரணி, கார்த்திகை முதலாம் பாதமுடைய உங்களுக்கு இந்த வருடம் குருபகவான் 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 7 இல் குரு யோகமான குரு ஆனா படியால் நீங்கள் உங்கள் காரியங்களை குருவை வணங்கி பெரியோர்களை வணங்கி செய்துவந்தால் இந்த வருடம் உங்களுக்கு சுபமான வருடமாக அமையும்

2.இடப ராசி

கார்த்திகை 2 ம் பாதம், 3 ம் பாதம், 4 ம் பாதம் ரோகிணி மிருகசீரிடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதமுடைய இடபராசி நேயர்களே..உங்களுக்கு இந்த வருடம் குருபகவான் ஆறாம் இடத்தில சஞ்சரிக்கின்றார்.இது அவ்வளவு நல்ல இடமில்லை.ரோகஸ்தானம் என்று சொல்வார்கள்.ஆனபடியால் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்.ஏதாவது உபாதைகள் இருந்தால் உடனடியாக அதற்கான நிவர்தியை மேற்கொண்டு நிவர்திகளை செய்து நல்ல பலன்களை அடைவீர்களாக இடபாராசி நேயர்கள் மிகவும் அவதானத்துடன் குரு பகவானை வியாழக்கிழமை தோறும் வணங்கி வருவது நன்மை பயக்கும்

3.மிதுனராசி

மிருகசீரிடம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் திருவாதிரை புனர்பூசம் முதலாம் பாதம், இரண்டாம்பாதம், மூன்றாம் பாதம் உடைய மிதுனராசி அன்பர்களே இவ்வருடம் உங்களுக்கு குருபகவானானவர் உத்தமமான பலன்களை தருகின்றார்.ஆனபடியால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் முழுவதும் நன்மையாக அமையும்.குருபார்த்தால் கோடி நன்மை என்பார்கள் அதுபோல் உங்களுக்கு குருபார்வை இருக்கிறது.ஆனபடியால் உங்களுடைய ராசி நன்மையான பலன்களை அடையும்

4.கடகராசி

கடகராசி நண்பர்களே புனர்பூசம் நான்காம் பாதம், பூசம் ஆயிலியமுடைய கடகராசி நியர்களே,உங்களுக்கு இந்தவருடம் சற்று மந்தமான நிலை காட்டும்.ஆனபடியால் நீங்கள் குருபகவானையும் தட்சணாமூர்த்தியையும் வழிபட்டு உங்களுடைய காரியங்களை தொடங்குவாது மிகவும் நன்மை பயக்கும்

5.சிம்மராசி

சிம்மராசி அன்பர்களே..மகம், பூரம், உத்தரம் முதலாம் பாதமுடைய சிம்மராசி அன்பர்களே உங்களுக்கு இவ்வருடம் அதமபலன்.இவ்வருடத்தில் உங்களுடைய பலன்கள் குரு பகவானுடைய பார்வை இல்லாதபடியால் அதர்மமான பலன்களே இடம்பெறும், ஆகவே செய்கின்ற காரியங்கள் முழுவதும் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்படுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

6.கன்னிராசி

அட்டம், சித்திரை முதலாம் பாதம், இரண்டாம் பாதம், உத்தரம் இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம் நான்காம் பாதம் உடைய கன்னிராசி அன்பர்களே இவ்வருடம் உங்களுக்கு யோகமான வருடம் குருபகவான் உங்களுக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கின்றார்.ஆனபடியால் நன்மையான காலங்களை இவ்வருடத்தில் ஆரம்பிப்பதும் மேற்படிப்பிற்கு உகந்த காலமாகவும் இவ்வருடத்தில் கன்னி ராசிக்கு அமைந்திருக்கின்றது.இவ்வருடம் நன்மையான வருடமாக குருவினுடைய பார்வை கிடைக்கப்பெற்று செய்கின்ற காரியங்கள் நன்மையாக அமையும் .


7.துலாம் ராசி

துலாராசி நேயர்களே..சித்திரை மூன்றாம் நான்காம் பாதங்கள், சுவாதி விசாகம் முதலாம் பாதம், இரண்டாம் பாதம் மூன்றாம் பாதமுடைய துலாம் ராசி நேயர்களே ..இவ்வருடம் உங்களுடைய ராசிக்குத்தான் குருபகவான் சஞ்சரிக்கின்றார்.குருபகவான் உங்களுடைய ராசிக்கு வருவது ஜென்மஸ்தானம் என்று சொல்லப்படும்.ஆனபடியால் மிகவும் அவதானமாக செய்கின்ற காரியங்கள் வேலைகள் முதலியவற்றை மிகுந்த அக்கறையுடன் ஒன்றிற்கு இரண்டுமுறை எல்லாவற்றையும் சரிபார்த்து செய்வது மிகுந்த நன்மை தரும்.நீங்களும் தவறாது வியாழக்கிழமைகளில் குருபகவான் தட்சணா மூர்த்தி முதலிய தெய்வங்களை வழிபட சிறந்த பலன்கள் உங்களுக்கு அமையும் .


8.விருச்சிகராசி

விசாகம் நான்காம் பாதம் அனுஷம் கேட்டை ஆகியவற்றைக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே இவ்வருடம் உங்களுக்கு குரு பகவான் சற்று தொல்லை தரக்கூடிய வருடமாக அமைய பெறுகிறது ஆனா படியால் நீங்கள் செய்கின்ற காரியங்களுக்கு முன்னர் உங்களது குருவையும் உங்களுடைய பெற்றாரையும் வணங்கி செய்கின்ற காரியங்களை செய்ய வேண்டும், அதே போல ஏதாவது காரியத்தை முன்னெடுப்பதாக இருந்தால் ஒன்றுக்கு பத்து முறை யோசனை செய்து செய்வதால் மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக அமையும் நீங்களும் வியாழக்கிழமைகளிலே தெட்சிணாமூர்த்தி குரு ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சம் பூ சாத்தி கடலை மாலை போட்டு வணங்கி வந்தால் நன்மை பயக்கும்

9.தனுசு ராசி

மூலம் பூராடம் உத்தராடம் முதலாம் பாதம் உடைய தனுசு ராசி நண்பர்களே உங்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக அமைய பெறுகிறது . குரு பகவான் பதினோராம் இடத்தில சஞ்சரிக்கிறார் நீங்கள் இவ்வருடம் செய்கின்ற காரியங்கள் சரியான நன்மை தரக்கூடியதாக அமையும் . நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடனும் தைரியத்திடனும் செய்வதற்கும் உங்கள் குல தெய்வத்தினுடைய வழிபாடு மிகவும் நன்மை பயக்கும்

10.மகர இராசி 

உத்தராடம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் திருவோணம் அவிட்டம் முதலாம் இரண்டாம் பாதம் உடைய மகர ராசி நண்பர்களே உங்களுக்கு இந்த குரு பகவான் ஆனவர் பத்தாம் இடத்தில சஞ்சரிக்கிறார் .உங்களுடைய வேலை மாற்றங்கள் ஐடா மாற்றங்கள் தோளிலே கஷ்டங்கள் முதல்வனை இடம் பெரும் குடும்பத்திலே நின்மதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது ..நீங்களும் கட்டாயம் வியாழக்கிழமைகளில் குரு பகவான் தெட்சிணாமுர்த்தி ஆகிய குல தெய்வங்களை வழிபட்டு செய்கின்ற காரியங்கள் வெற்றியளிக்கும் ..

11.கும்ப ராசி 

கும்ப ராசி அன்பர்களே அவிட்டம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம், சதயம், பூரட்டாதி முதலாம் இரண்டாம் மூன்றாம் பாதங்களில் அமைந்த கும்ப ராசி அன்பர்களே உங்களுக்கு இவ்வருடம் குரு பகவான் நன்மை தரக்கூடிய இடங்களில் சஞ்சரிக்கிறார் .ஆனா படியால் நீங்கள் செய்கின்ற தொழில் உங்களது குடும்பம் ஆகியவற்றில் மகிழ்ச்சி நிலவும் .நீங்கள் செய்கின்ற காரியங்கள் குடும்ப ஒற்றுமை முதலியவற்றில் மிகுந்த அக்கறையுடனும் உற்சாகத்துடனும் செய்து வர உங்களுக்கு இவ்வருடமினிமையான வருடமாக அமையும்

12.மீன ராசி

மீன ராசி அன்பர்களே பூரட்டாதி முதலாம் பாதம் உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரம் உடைய மீன ராசி நண்பர்களே உங்களுக்கு குரு பகவான் எட்டாம் இடத்தில சஞ்சரிக்கிறார் இது உங்களுக்கு நன்மையான காலம் கிடையாது. ஆதலால் மிகவும் அவதானமாக செயற்பட்டு குரு வழிபாடு தெட்சணாமுர்த்தி வழிபாடுகள் செய்து வர உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நீங்கள் செய்து வருகின்றன காரியங்களுக்கும் எடுக்கின்ற முயற்சிகளிற்கும் தடங்கல்கள் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு பெரியவர்களுடைய அறிவுரை ஆலய வழிபாடு ஆகியவற்றை செய்து வர நன்மையான வருடமாக அமையும்

Post a Comment

0 Comments