கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாட்டில் உலக தலைவர்கள் வடகொரியாவின் ஆயுத திட்டம் குறித்து ஆராயவுள்ள நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
வுடகொரிய ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் எந்த பகுதியையும் தாக்ககூடிய வல்லமைமிக்க ஏவுகணையை பரிசோதித்துள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் புதிய ஏவுகணை 8000 கிலோமீற்றர் வரை செல்லக்கூடியது என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


0 Comments